'ஒங்க மூஞ்சு கூடதான் நல்லாயில்லே...' 
விவேக் ஆவேசம்!

கொஞ்சம் விட்டிருந்தா சின்ன கலைவாணரு, 'கொன்ன' கலைவாணரு ஆகியிருப்பாரு. Vivekஅப்படிரு கோவத்தை உண்டாக்கிட்டாரு ரிப்போர்ட்டர் ஒருத்தர்! பத்மஸ்ரீ வாங்கிய கையோடு பத்திரிகையாளர்களை சந்திக்க பிரியப்பட்டார் விவேக். எனக்கு தோதா, கேள்வியே கேட்காத நிருபருங்க இருந்தா அனுப்பி வைங்கன்னு சொல்லியிருப்பாரு போல... எண்ணி இருவதே பேர்!

அந்த பெரிய ஹாலில் ஜிலோனு நடந்த பிரஸ்மீட்லே, படார்னு ஒரு கேள்விய கேட்டு, அவருக்குள்ளே தூங்கிகிட்டு இருந்த புலிய எழுப்பி வுட்டுட்டாரு ஒரு நிருபர். 'டி.வியிலே உங்க சீன் வந்தாலே, ஐய்ய்யோ, இந்தாளா? அட்வைஸ்ங்கிற பேருல பயங்கரமா அறுத்திடுவாரே, டிவியே மூடுங்க'ன்னு மூடிடுறா என் வொய்ஃப். நிறைய பேருக்கு வடிவேலு காமெடிதான் பிடிச்சிருக்கு'ன்னு சொல்ல, கொஞ்ச நேரம் ஏரியாவே கப்சிப். முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்க நிருபரையே பார்த்த விவேக், 'அட்வைஸ் பண்ணினா எவனுக்கு புடிக்குது? இப்போ கூட ஒங்க மூஞ்சுக்கு தாடி நல்லாயில்லே, டி.பி வந்தவன் மாதிரி இருக்கு. தாடிய எடுங்கன்னா கேட்கவா போறீங்க? தேசமே என் காமெடி புடிச்சிருக்குன்னு சொன்னதாலதான் இந்த விருது கொடுத்திருக்காங்க' என்றார். 'நீங்க சொன்ன அந்த இன்னொருத்தரு மாதிரி நடிக்க நான் எதுக்கு? அவரே நடிச்சிட்டு போகலாமே' என்று கூறிவிட்டு படக்கென்று எழுந்து கொண்டார்.

'அண்ணே நல்ல மூடுல வந்தாரு. இப்படி ஏடாகூடமா பேசி அவர கோவப்பட வச்சிட்டீங்களே?' என்றார் அவருடன் வந்த கைத்தடி ஒருத்தர். அத விடுங்க. நிருபர் என்ன பண்ணினாரு அப்புறம்? ம்.. வீட்லே இருந்த டிவி பொட்டிய உடைச்சாரோ என்னவோ?



0 comments:

Post a Comment